தளபதிக்கு தங்கையாகும் சிவகார்த்திகேயன் பட நடிகை!
விரைவில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் காலம் வரும். அதற்காக காத்திருக்கிறேன்.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமாவில் நீதானா அவன் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் தமிழ், மலையாளம்,இந்தி மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் இவர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்து வெளியான கனா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற நிலையில், தற்போது இவர் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், தான் விஜய்க்கு தங்கையாக நடிக்கவுள்ளதாக கூறியுள்ளார். இவர் தங்கையாக நடிப்பது குறித்து சங்கடம் தெரிவித்திருந்தாலும், அவருடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பதற்காக அத்தானை ஏற்றதாகவும், விரைவில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் காலம் வரும். அதற்காக காத்திருக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.