நடிகர் சங்கத்திற்கு ரூ.1 லட்சம் நன்கொடை அளித்தார் சிவகார்த்திகேயன்..!!
நடிகர் சிவகார்த்திகேயன் தனது ஜி.தாஸ் நினைவு அறக்கட்டளை மூலமாக நடிகர் சங்கத்திற்கு ரூ.1 லட்சம் நன்கொடை அளித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா 2 வது அலையின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் மக்கள் பாதிப்பக்கப்பட்டு வருகின்றார்கள்.
இந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் பணி இன்றி தவிக்கும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் நடிகர் சங்க உறுப்பினர்கள் நலனுக்காக பல பிரபலங்கள் தங்களால் முடிந்த உதவியை செய்து வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் னது ‘ஜி.தாஸ் நினைவு அறக்கட்டளை’ மூலமாக நடிகர் சங்கத்திற்கு ரூ.1 லட்சம் நன்கொடை வழங்கியுள்ளார்.