தனுஷுடன் மோதும் சிவகார்த்திகேயன்..?

இந்த இரண்டு படங்களும் வருகின்ற டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஜகமே தந்திரம் இந்த திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது மேலும் மே 1ஆம் தேதி வெளியாகவிருந்த இந்தத் திரைப்படம் கொரோனோ வைரஸ் காரணமாக ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது .
மேலும் இந்த திரைப்படத்தின் பாடல்கள் விரைவில் வெளியாக உள்ளதாக இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் சமீபத்தில் நடந்த பேட்டியில் தெரிவித்தார் . மேலும் இந்த திரைப்படம் வருகின்ற டிசம்பர் மாதம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தற்பொழுது நெல்சனின் இயக்கத்தில் ‘டாக்டர்’ படத்தில் நடித்துவருகிறார், இந்த படத்தில் மலையாள நடிகையான பிரியங்கா அருள் மோகன் ஹீரோயினாக அறிமுகமாகிறார். மேலும் கே. ஜே.ஆர். ஸ்டுடியோஸூடன் சிவகார்த்திகேயனும் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தில் யோகிபாபு, வினய் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
மேலும் இந்த படத்திற்கு அனிருத் அவர்கள் இசையமைக்கிறார். இந்த நிலையில் இந்த இரண்டு படங்களும் வருகின்ற டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs RCB : அதிரடி காட்டி படிதர் அடித்த அரைசதம்.., சிஎஸ்கே அணிக்கு இதுதான் டார்கெட்.!
March 28, 2025
மீண்டும் மின்னல் வேக ஸ்டம்பிங் செய்த தோனி.! மிரண்டு போன ஆர்சிபி வீரர்கள்! நடையை கட்டிய சால்ட்..
March 28, 2025