ஆயுத பூஜை டார்கெட்…. சூர்யாவுடன் மோதும் சிவகார்த்திகேயன்..?
சூர்யாவின் 40 வது திரைப்படமும் சிவகார்த்திகேயனின் ஒரே தினத்தில் வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் சூர்யாவின் 40 வது திரைப்படத்தை இயக்குனர் பாண்டியராஜ் இயக்கவுள்ளார். இந்த திரைப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ்நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி இமான் இசையமைக்கவுள்ளார். இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார், மேலும் நடிகர் சத்யராஜ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்கி படத்தை அக்டோபர் மாதம் 14 ஆம் தேதி ஆயுத பூஜை அன்று வெளியீட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதைபோல் சிவகார்த்திகேயன் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகும் ‘டான்’ என்ற படத்தில் நடிக்கவுள்ளார். அந்த படத்திற்கு அனிருத் இசையமைப்ப தாகவும் சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. அதற்கான ஒரு வீடியோவும் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்ப்பு கிடைத்தது. இந்த படத்திற்கான படப்பிடிப்பு வருகின்ற 12 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படமும் அக்டோபர் மாதம் 14 ஆம் தேதி ஆயுத பூஜை அன்று வெளியீட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் சூர்யாவின் 40 வது திரைப்படமும் சிவகார்த்திகேயனின் ஒரே தினத்தில் வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளதால் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்துள்ளார்கள்.