நடிகர் சிவகார்த்திகேயன் தனது 36 வது பிறந்த நாளை டான் படத்தின் படக்குழுவினரோடு இணைந்து கொண்டாடி மகிழ்ந்துள்ளார். அதற்கான புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் கடந்த 2012ஆம் ஆண்டு வெளியான மெரினா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் சிவகார்த்திகேயன். இந்த படத்தை தொடர்ந்து 3,மனம் கொத்தி பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, காக்கி சட்டை, ரஜினிமுருகன், ரெமோ, வேலைக்காரன், சீமராஜா, ஹீரோ, நம்ம வீட்டு பிள்ளை, என படிப்படியாக வெற்றிப்படங்களில் நடித்து ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமாகி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக இருக்கிறார்.
இவருக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளத்தை சொல்லியே தெரிய வேண்டாம்.இந்த நிலையில் தற்போது இவர் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் டாக்டர் திரைப்படத்திலும் இயக்குனர் ரவிகுமார் இயக்கத்தில் அயலான் என்ற திரைப்படத்திலும் நடித்து முடித்துள்ளார்.
இதில் டாக்டர் திரைப்படம் வருகின்ற மார்ச் மாதம் 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அதனை தொடர்ந்து திரைப்படம் வருகின்ற கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்ததாக தற்போது இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் டான் என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.
மேலும் இன்று நடிகர் சிவகார்த்திகேயன் 36 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள், பிரபலங்கள், ட்விட்டரில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். மேலும் தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் டான் படத்தின் படக்குழுவினரோடு தனது பிறந்த நாளை கொண்டாடி மகிழ்ந்துள்ளார். அதற்கான புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…