தளபதியுடன் கூட்டணி அமைக்கும் சிறுத்தை சிவா.!

Default Image

தளபதி 66 அல்லது 67யை சிறுத்தை சிவா தான் இயக்குவார் என்று கருதப்படுகிறது.

தல அஜித்துடன் தொடர்ந்து 4 ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தவர் இயக்குநர் சிறுத்தை சிவா. சமீபத்தில் இவரது இயக்கத்தில் வெளியான விஸ்வாசம் ர‌ஜினியின் படத்துடன் மோதி வசூல் அளவிலும், விமர்சன ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது இவர் ரஜினியை வைத்து அண்ணாத்த படத்தை இயக்குகிறார்.

இதனையடுத்து பலர் சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் நடிக்க ஆசைப்படுகிறார்களாம். சமீபத்தில் கூட விக்ரமுடன் ஒரு கமர்ஷியல் படத்தை இயக்க போவதாக தகவல் வெளியானது. மேலும் சூர்யா, விக்ரம் என பலர் லைன் கட்டி நிற்கிறார்களாம். ஆனால் விக்ரமும், சூர்யாவுக்கு ஏகப்பட்ட படங்களை தங்களது கைவசம் வைத்துள்ளதால் சான்ஸ் குறைவு தான் . ஆனால் தளபதி விஜய் முருகதாஸூடன் மட்டும் ஒரு படத்தில் கமிட்டாகியுள்ளதை அடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே விஜய் அவர்கள் விஸ்வாசம் பட வெற்றிக்கு பின்னர் தனக்காக ஒரு படம் தயார் செய்ய சிவாவிடம் கேட்டு கொண்டாராம். ஆனால் சிவா அடுத்தடுத்து பிஸியாக இருந்ததால் அதனை தவிர்த்தாக கூறப்படுகிறது. கூடுதலும் தளபதி 66 அல்லது 67 ஆகிய படங்களில் ஏதாவது ஒரு படத்தை சிறுத்தை சிவா இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படியானால் அந்த படத்திற்கு சிவாவின் சம்பளம் 15கோடியாக இருக்க கூடும் என்று தெரிகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்