வரலாற்றில் இன்று (ஜனவரி 2 ) -சர் ஜார்ஜ் பிடெல் ஏரி நினைவு தினம்

Published by
Venu

சர் ஜார்ஜ் பிடெல் ஏரி என்பவர்  ஆங்கிலேய கணிதவியலரும், வானியலாளரும் ஆவார்.இவர் 1801-ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் தேதி வடகிழக்கு இங்கிலாந்தில் பிறந்தார். இவர் கொல்சேச்டெர் பள்ளியில் பயின்றார்.பிறகு 1819-ஆம் ஆண்டு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். 1826-ஆம் ஆண்டு   கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கணிதவியல் பேராசிரியரானார். 1835 -ஆம் ஆண்டில் இருந்து அரச வானியலாராக 46 ஆண்டுகள் பணியாற்றினார். இவருக்கு இங்கிலாந்து அரசக் கழகம் கோப்லே விருதையும் அரசக் கழக விருதையும் (சர்) வழங்கியது. 1827முதல் 1883 வரை இவர் அக்கழகத்தின் தலைவராகவும் விளங்கினார்.

ஏரி கேம்பிரிட்ஜ் வான்காணகத்தின் இயக்குநராகப் பணியாற்றியபோது மேம்படுத்தப்பட்ட வான்கோளக் கிடைவரை நோக்கீட்டு முறையை அறிமுகப்படுத்தினார். நோக்கீடுகளை உரிய அளவுகோலில் அடக்கி பதிப்பிக்கும் முறையை உருவாக்கினார்.

1847-ஆம் ஆண்டு  நிலா நோக்கீடுகளுக்கான வானுச்சித் தொடுவரை (altazymuth) கருவியை நிறுவினார். 1859 -ஆம் ஆண்டு  33செ.மீ. புவி நடுவரை தொலைநோக்கியையும் புதிய சுழலியக்க வட்டத்தையும் (new transit circle) அமைத்தார். மேலும் 1838-ஆம் ஆண்டு காந்த, வானிலையியல் என்ற புதிய துறை ஒன்றையும் தோற்றுவித்தார்.சூரியக் கரும்புள்ளிகளுக்கான அன்றாடப் பதிவேட்டையும் நடைமுறைப்படுத்தினார்.இவர் அமெரிக்கா, கனடா நட்டெல்லையை வகுத்தார். ஒரிகான், கடலோரப் பகுதி எல்லையையும் வகுத்தார். ஜனவரி 2 ஆம் தேதி இன்று இவருக்கு நினைவு நாள் ஆகும்.

 

Published by
Venu

Recent Posts

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

5 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

5 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

5 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

5 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

5 hours ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

5 hours ago