வரலாற்றில் இன்று (ஜனவரி 2 ) -சர் ஜார்ஜ் பிடெல் ஏரி நினைவு தினம்
சர் ஜார்ஜ் பிடெல் ஏரி என்பவர் ஆங்கிலேய கணிதவியலரும், வானியலாளரும் ஆவார்.இவர் 1801-ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் தேதி வடகிழக்கு இங்கிலாந்தில் பிறந்தார். இவர் கொல்சேச்டெர் பள்ளியில் பயின்றார்.பிறகு 1819-ஆம் ஆண்டு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். 1826-ஆம் ஆண்டு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கணிதவியல் பேராசிரியரானார். 1835 -ஆம் ஆண்டில் இருந்து அரச வானியலாராக 46 ஆண்டுகள் பணியாற்றினார். இவருக்கு இங்கிலாந்து அரசக் கழகம் கோப்லே விருதையும் அரசக் கழக விருதையும் (சர்) வழங்கியது. 1827முதல் 1883 வரை இவர் அக்கழகத்தின் தலைவராகவும் விளங்கினார்.
ஏரி கேம்பிரிட்ஜ் வான்காணகத்தின் இயக்குநராகப் பணியாற்றியபோது மேம்படுத்தப்பட்ட வான்கோளக் கிடைவரை நோக்கீட்டு முறையை அறிமுகப்படுத்தினார். நோக்கீடுகளை உரிய அளவுகோலில் அடக்கி பதிப்பிக்கும் முறையை உருவாக்கினார்.
1847-ஆம் ஆண்டு நிலா நோக்கீடுகளுக்கான வானுச்சித் தொடுவரை (altazymuth) கருவியை நிறுவினார். 1859 -ஆம் ஆண்டு 33செ.மீ. புவி நடுவரை தொலைநோக்கியையும் புதிய சுழலியக்க வட்டத்தையும் (new transit circle) அமைத்தார். மேலும் 1838-ஆம் ஆண்டு காந்த, வானிலையியல் என்ற புதிய துறை ஒன்றையும் தோற்றுவித்தார்.சூரியக் கரும்புள்ளிகளுக்கான அன்றாடப் பதிவேட்டையும் நடைமுறைப்படுத்தினார்.இவர் அமெரிக்கா, கனடா நட்டெல்லையை வகுத்தார். ஒரிகான், கடலோரப் பகுதி எல்லையையும் வகுத்தார். ஜனவரி 2 ஆம் தேதி இன்று இவருக்கு நினைவு நாள் ஆகும்.