பாடகர் எஸ். பி. பி-யின் கான்சியஸை உயர்த்த உதவும் அவரது பாடல்கள்.!
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு செயற்கை சுவாசத்தில் சிகிச்சை பெற்று வரும் எஸ். பி. பி-யின் கான்சியஸை உயர்த்தும் வகையில் அவரது பாடல்களையே சிகிச்சை அறையில் ஒலிக்க வைக்கப்பட்டுள்ளது.
இந்திய மொழிகளில் 40,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி சாதனை படைத்தவர் எஸ். பி. பாலசுப்பிரமணியம்.கடந்த 5ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அதனையடுத்து கடந்த 15ம் தேதி உடல்நிலை மோசமடைய தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் . அதனையடுத்து அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும், பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது.
பல கொரோனா நோயாளிகளின் மன அழுத்தத்தை மாற்ற எஸ். பி. பி பாடல்கள் உட்பட பல மெல்லிசை பாடல்களை கேட்க வைக்கும் சிகிச்சை பல மருத்துவமனைகளில் நடந்து வருகிறது. அந்த வகையில் செயற்கை சுவாத்தில் உள்ள எஸ். பி. பாலசுப்பிரமணியமின் மன அழுத்தத்தை மாற்றவும், அவரது கான்சியஸை அளவை உயர்த்தவும், அவர் சிகிச்சை பெற்றும் வரும் அறையில் எஸ். பி. பி பாடிய காதல் பாடல்கள், பக்தி பாடல்கள் உட்பட அனைத்து வகை பாடல்களையும் ஒலிக்க வைத்துள்ளனர். பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மன அழுத்தத்தை மாற்றிய அவரது பாடல்கள் அவரது சிகிச்சைக்கும் இசைக்கப்படுகிறது. அவர் விரைவில் மீண்டு வர பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உட்பட ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.