தினகரனின் அமமுக கட்சியில் இணைந்த மேலும் ஒரு சினிமா பிரபலம்!!
- அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் தற்போது பாடகர் மனோ இணைந்துள்ளார்
- அதிமுகவில் இருந்து ஓரம் கட்டப்பட்ட தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற ஒரு கட்சியைத் துவங்கி தற்போது நடத்தி வருகிறார்
தனது சித்தி சசிகலா சிறைக்கு சென்ற பின்னர் அதிமுகவில் இருந்து ஓரம்கட்டப்பட்ட தினகரன் கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற ஒரு கட்சியை நடத்தி வருகிறார். கிட்டத்தட்ட இந்த கட்சி அடிப்படை கட்டமைப்பை உருவாக்கி விட்டது.
மேலும், பல பிரபலங்களும் மற்ற கட்சியினரும் இந்த கட்சியில் வந்து இணைந்து கொண்டுள்ளனர். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பாமகவின் துணைத்தலைவர் பதவியில் இருந்த நடிகர் ரஞ்சித் அந்த பதவியை துறந்து விட்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பின்னணி பாடகர் மனோ சென்னையில் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் தினகரனை நேரில் சந்தித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்துள்ளார்.