சென்னை: இந்திய பெருங்கடலுக்கு மேலே பறந்து கொண்டிருந்த சிங்கப்பூர் விமானம் திடீரென 1.8 கிமீ தூரத்திற்கு கிழே பறந்தது.
கடந்த மே 20ஆம் தேதி லண்டன் ஹீத்ரோவில் இருந்து சிங்கப்பூருக்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் SQ32 போயிங் 777 300ER புறப்பட்டது. அப்போது (மே 21) இந்திய பெருங்கடல் பகுதியில் ஜரவாதி படுகையில் 37,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கையில் திடீரென 3 நிமிடத்தில் 1800மீட்டர் (1.8 கி.மீ) தூரம் கீழே சரிந்துள்ளது.
இந்த திடீர் சரிவில், விமானத்தில் பயணித்த பலருக்கும் காயம் ஏற்பட்டது. இந்த விமானத்தில் மொத்தம் 211 பயணிகள். 18 ஊழியர்கள் பயணித்துள்ளனர். இதில் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 74 வயது முதியவர் ஒருவர் விமானம் கிழே சரிந்த அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் 3 இந்தியர்கள் பயணித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
விமானம் எதிர்பார விதமாக கிழே சரிந்ததில் 25க்கும் மேற்பட்டவர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. விமானத்தின் நிலை அறிந்த விமானி உடனடியாக சுதாரித்துக்கொண்டு, பாங்காக் விமானத்தில் தரையிறக்கினார். அங்கு காயமடைந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வானில் பறந்து கொண்டிருக்கும் வேளையில் எடுக்கப்பட்ட பரபரப்பான காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
விமானத்தில் பயணித்தவர்களில், ஆஸ்திரேலியாவிலிருந்து 56 பேரும், கனடாவிலிருந்து 2 பேரும், ஜெர்மனியிலிருந்து 1 பேரும், இந்தியாவிலிருந்து 3 பேரும், இந்தோனேசியாவிலிருந்து 2 பேரும், ஐஸ்லாந்திலிருந்து 1 பேரும், அயர்லாந்திலிருந்து 4 பேரும், இஸ்ரேலிலிருந்து 1 பேரும், மலேசியாவிலிருந்து 16 பேரும், மியான்மரில் இருந்து 2 பேரும், நியூசிலாந்தில் இருந்து 23 பேரும், பிலிப்பைன்ஸில் இருந்து 5 பேரும், சிங்கப்பூரில் இருந்து 41 பேரும், தென் கொரியாவில் இருந்து 1 நபரும், ஸ்பெயினில் இருந்து 2 பேரும், இங்கிலாந்தில் இருந்து 47 பேரும், அமெரிக்காவிலிருந்து 4 பேரும் பயணித்துள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹைதராபாத்: 'புஷ்பா 2' சிறப்புக் காட்சியின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு, பெண் உயிரிழந்ததற்கு, 'போலீஸ் சொன்னதை மதிக்காமல், அல்லு அர்ஜுன்…
சென்னை: வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதை தொடர்ந்து, தூத்துக்குடி உட்பட 9 துறைமுகங்களில் நேற்று முன் தினம்…
சென்னை : அண்மையில் புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசுகையில், பல்வேறு குற்ற வழக்குகளில் சிக்கியவர்களை பாஜக…
திருவண்ணாமலை : இன்று (டிசம்பர் 21) பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் திருவண்ணாமலை சந்தைமேடு பகுதியில் 'உழவர் பேரியக்க மாநாடு'…
திருவள்ளூர் : தமிழ்நாடு ஊர்காவல் படை காவலர்களுக்கான காலிபணியிடங்களை நிரப்பும் அறிவிப்புகள் குறிப்பிட்ட இடைவெளியில் மாவட்ட வாரியாக அறிவிக்கப்பட்டு வருகின்றன.…
தெலங்கானா : 'புஷ்பா 2' படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க வந்த பெண் உயிரிழந்த விவகாரம் குறித்து, தெலங்கானா முதல்வர்…