நடுவானில் இருந்து 1.8 கி.மீ விழுந்த சிங்கப்பூர் விமானம்.! பரபரப்பு வீடியோ காட்சிகள்…

London to SIngapore Filigh Boeing 777 300ER

சென்னை: இந்திய பெருங்கடலுக்கு மேலே பறந்து கொண்டிருந்த சிங்கப்பூர் விமானம் திடீரென 1.8 கிமீ  தூரத்திற்கு கிழே பறந்தது.

கடந்த மே 20ஆம் தேதி லண்டன் ஹீத்ரோவில் இருந்து சிங்கப்பூருக்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் SQ32 போயிங் 777 300ER புறப்பட்டது. அப்போது (மே 21) இந்திய பெருங்கடல் பகுதியில் ஜரவாதி படுகையில் 37,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கையில் திடீரென 3 நிமிடத்தில் 1800மீட்டர் (1.8 கி.மீ) தூரம் கீழே சரிந்துள்ளது.

இந்த திடீர் சரிவில், விமானத்தில் பயணித்த பலருக்கும் காயம் ஏற்பட்டது. இந்த விமானத்தில் மொத்தம் 211 பயணிகள். 18 ஊழியர்கள் பயணித்துள்ளனர். இதில் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 74 வயது முதியவர் ஒருவர் விமானம் கிழே சரிந்த அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் 3 இந்தியர்கள் பயணித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விமானம் எதிர்பார விதமாக கிழே சரிந்ததில் 25க்கும் மேற்பட்டவர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. விமானத்தின் நிலை அறிந்த விமானி உடனடியாக சுதாரித்துக்கொண்டு, பாங்காக் விமானத்தில் தரையிறக்கினார். அங்கு காயமடைந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வானில் பறந்து கொண்டிருக்கும் வேளையில் எடுக்கப்பட்ட பரபரப்பான காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

விமானத்தில் பயணித்தவர்களில், ஆஸ்திரேலியாவிலிருந்து 56 பேரும், கனடாவிலிருந்து 2 பேரும், ஜெர்மனியிலிருந்து  1 பேரும், இந்தியாவிலிருந்து 3 பேரும், இந்தோனேசியாவிலிருந்து 2 பேரும், ஐஸ்லாந்திலிருந்து 1 பேரும், அயர்லாந்திலிருந்து 4 பேரும், இஸ்ரேலிலிருந்து 1 பேரும், மலேசியாவிலிருந்து 16 பேரும், மியான்மரில் இருந்து 2 பேரும், நியூசிலாந்தில் இருந்து 23 பேரும், பிலிப்பைன்ஸில் இருந்து 5 பேரும், சிங்கப்பூரில் இருந்து 41 பேரும், தென் கொரியாவில் இருந்து 1 நபரும், ஸ்பெயினில் இருந்து 2 பேரும், இங்கிலாந்தில் இருந்து 47 பேரும், அமெரிக்காவிலிருந்து 4 பேரும் பயணித்துள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
TVK Vijay Dharmapuri
Pradeep John -TN Rains
Kasthuri Shankar - Police Arrest
Arvind Kejriwal - Kailash Gahlot
Space X - Elon Musk
tn rainy