இனி அடுத்த மாதத்திலிருந்து சிங்கப்பூருக்குச் செல்லலாம்..! ஆனால் இவை கட்டாயம்..!

Published by
Edison

சிங்கப்பூர் அடுத்த மாதத்திலிருந்து COVID-19 டிஜிட்டல் பயண பாஸை ஏற்க உள்ளது.

மே மாதத்திலிருந்து கோவிட் -19 சோதனைகள் மற்றும் தடுப்பூசிகளுக்கு டிஜிட்டல் சான்றிதழ்கள் வாங்கியவர்களின் மொபைல் பயண பாஸை சிங்கப்பூர் அரசாங்கம் ஏற்றுக் கொள்ளும், என்று அதன் விமான  சேவை ஒழுங்குமுறை திங்களன்று தெரிவித்துள்ளது.IATAவின் முயற்சியை ஏற்றுக்கொண்ட  நாடுகளில் சிங்கப்பூர் முதலாவதாகும்.

விமான நிலையங்களில் புறப்படுவதற்கு முன்னர்,பயணிகள் அங்கீகாரம் பெற்ற ஆய்வகங்களிலிருந்து, கோவிட் -19 சோதனைகள் மற்றும் தடுப்பூசி போட்டுக்கொண்ட விவரங்கள் அடங்கிய பயண பாஸை தங்கள் ஸ்மார்ட்போனில் காண்பிப்பதன் மூலம் சிங்கப்பூருக்கு  செல்ல அனுமதி பெற முடியும்,என்று சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் (IATA) தெரிவித்துள்ளது.

IATAவின் பாஸை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.இதனைத்தொடர்ந்து அரேபிய எமிரேட்ஸ், கத்தார் ஏர்வேஸ் மற்றும் மலேசியா ஏர்லைன்ஸ் உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட விமான சேவை நிறுவனங்கள் இந்த பாஸை சோதனை செய்கின்றன.

ஆகவே,IATA இயக்குநர் ஜெனரல் வில்லி வால்ஷ் ஒரு அறிக்கையில்,”எங்கள் IATA-வுடன் சிங்கப்பூர் அரசாங்கம் இணைந்த இத்தகைய கூட்டு முயற்சிகளின் வெற்றியின்மூலம் மற்ற நாடுகளும் அவற்றை பின்பற்றுவதற்கு ஒரு மாதிரியாக மாறும்” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த 2020 ஆண்டுடன் தற்போதுள்ள சூழலை ஒப்பிட்டு பார்க்கும்போது குறைவான கொரோனா வைரஸ் வழக்குகளைக் கொண்ட ஆசிய வணிக மையமாக சிங்கப்பூர் உள்ளது.மேலும் தொற்றுநோய்களின் போது தொழில்நுட்பத்தை வளர்ப்பதிலும், பயன்படுத்துவதிலும் ஒரு தலைமையிடத்தில் சிங்கப்பூர் இருந்து வருகிறது.

Published by
Edison

Recent Posts

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 hour ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 hour ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

2 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

2 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

2 hours ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

2 hours ago