கொரோனா தடுப்பூசி நம்மையும், நம் குடும்பத்தினரையும் பாதுகாக்கும். ப்ளீஸ்.. தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் என சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லுங்க் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உலகளவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்கா, இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட உலக நாடுகள் தீவிரமடைந்துள்ளது. இதில் பல தடுப்பூசிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதை தொடர்ந்து, தடுப்பு மருந்திற்கு அவசரகால ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இங்கிலாந்து, ரஷ்யா, அமெரிக்காவில் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியுள்ளது.
அந்தவகையில், பிரிட்டனில் ஃபைசர் தடுப்பூசியும், அமெரிக்காவில் மார்டனா கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மேலும் ஃபைசர் தடுப்பு மருந்து, கொரோனாக்கு எதிராக 95 சதவீதம் செயல்படுவதால், ஃபைசர் தடுப்பு மருந்துகளை அவசரகால பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்த உலக சுகாதார அமைப்பு அனுமதி வழங்கியது.
இந்நிலையில், சிங்கப்பூரில் ஃபைசர் கொரோனா தடுப்பு மருந்திற்கு அனுமதி வழங்கப்பட்டு, தடுப்பு மருந்து செலுத்தும் பணிகள் தொடங்கியுள்ளது. மேலும், தடுப்பூசி குறித்த அச்சத்தை போகும் விதமாக அந்நாட்டு பிரதமர் லீ சியன் லுங்க், மக்கள் முந்நிலையில் கொரோனா தடுப்பு மருந்து செலுத்திக்கொண்டார். அதன்பின் பேசிய அவர், “கொரோனா தடுப்பூசி நம்மையும், நம் குடும்பத்தினரையும் பாதுகாக்கும். ப்ளீஸ்தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்.” என தடுப்பூசி போடுமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…
டெல்லி : ஐபிஎல் 2025 சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ள நிலையில், வரப்போகும் இரண்டு மாத கால கிரிக்கெட்…
சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் மாதம் முதல் சர்வதேச…
சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…