சிங்கப்பூரில் 10 இந்தியர்கள் மீது அதிரடியாக வழக்குப்பதிவு செய்த சிங்கப்பூர் அரசு
முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸானது, தொடர்ந்து 200-க்கும் மேற்பட்ட நாடுகளை தாக்கி வருகிறது. இதுவரை இந்த வைரஸால், உலக அளவில், 5,306,235 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 340,047 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், அனைத்து நாடுகளிலேயும் இந்த வைரஸ் பரவாமல் இருக்க கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், சிங்கப்பூரில், மற்ற வீடுகளுக்கு சென்று பிறரை சந்திக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு தடையை மீறுபவர்களுக்கு, 6 மாதம் வரை ஜெயில் தண்டனை மற்றும் சிங்கப்பூர் டாலர் 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சிங்கப்பூரில் ஒரு வாடகை வீட்டில் குடியிருக்கும் ஒரு பெண், 2 ஆண்கள் கொண்ட இந்திய குடும்பத்தினர், தங்கள் வீட்டுக்கு ஒரு பெண், 6 ஆண்கள் என 7 இந்தியர்களை வரவழைத்து, அவர்களுடன் சேர்ந்து பேசி தேநீர் குடிப்பதும், படிப்பதுமாக மகிழ்ச்சியாக இருந்துள்ளனர்.
இதனை கண்டுபிடித்த சிங்கப்பூர் போலீசார், 10 பேர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், தாங்கள் புதியவர்கள் என்பதால், தங்களுக்கு விதிமுறைகள் தெரியாது என தெரிவித்துள்ளனர்.
சென்னை : இன்று இந்து கடவுள் முருகனுக்கு உகந்த பண்டிகைகளில் ஒன்றான தைப்பூச திருவிழா முருகனின் அறுபடை வீடுகள் மட்டுமன்றி…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி, நான்கு நாள் அரசு முறை பயணமாக இன்று டெல்லியில் இருந்து பிரான்ஸ் மற்றும்…
சென்னை : தமிழகம் வெற்றிக் கழகம் கட்சி ஆரம்பித்து தற்போது வரையில் அக்கட்சி நிர்வாகத்திற்கு 120 மாவட்ட செயலாளர்கள் அறிவிக்கப்படுவார்கள்…
சென்னை : இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் 'ட்ராகன்' படத்தின் டிரெய்லர் வெளியானது. இப்படத்தில் கயாடு…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்பு பாகிஸ்தானில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் தொடர் இப்பொது பரபரப்பான கட்டத்தில் உள்ளது.…
ஒடிசா : இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டியின் போ, ஏற்பட்ட ஃப்ளட்லைட் பிரச்சனை தொடர்பாக ஒடிசா அரசு…