உள்நாட்டில் கொரோனா வகைகளில் ‘டெல்டா’ அதிகம் காணப்படுகிறது – சிங்கப்பூர் அதிர்ச்சி தகவல்!
சிங்கப்பூர் மக்கள் டெல்டா வகை உருமாறிய வைரஸால் அதிகம் பாதிக்கப்படுவதாக சுகாதார அமைச்சகம் தகவல்.
சிங்கப்பூரில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் அதிகப்படியானோர் இந்தியாவில் முதன் முதலில் தோன்றிய டெல்டா வகை உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த வகை உருமாறிய வைரஸ் சிங்கப்பூரில் கொரோனா தொற்றுநோய் பாதிப்பை உயர்த்திக் காட்டுகிறது என்றும் சுகாதார அமைச்சகத்தின் குறிப்பிடுகின்றன. இதுவரை உருமாறிய கொரோனா வைரஸில் டெல்டா வகை மோசமானது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருந்தது.
இந்தியாவில் கொரோனா 2 வது அலை பாதிப்புகள் உச்சத்தை அடைய இந்த வகை உருமாறிய வைரஸே முக்கிய காரணமாக அமைந்ததுள்ளது. இதையடுத்து மே 31 ஆம் தேதி நிலவரப்படி சிங்கப்பூர் உள்ளூரில் 449 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவற்றில் 428 டெல்டா உருமாறிய இந்தியாவில் முதன்முதலில் கண்டறியப்பட்டது மற்றும் 9 பீட்டா உருமாறிய தென்னாப்பிரிக்காவில் முதன்முதலில் அடையாளம் காணப்பட்டது என்று சுகாதார அமைச்சகம் நேற்று அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும் மே மாத தொடக்கத்திலேயே டெல்டா உருமாறிய வைரஸ் உள்நாட்டில் இருப்பதை சிங்கப்பூர் அதிகாரிகள் முதலில் தெரிவித்திருந்தனர். டெல்டா உருமாறிய யுனைடெட் கிங்டம் போன்ற பிற நாடுகளில் தொற்றுநோய் பாதிப்பில் புதிய உச்சத்தை ஏற்படுத்தியது என்பது கவலையளிப்பதாக உள்ளது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து டெல்டா உருமாறிய கொண்ட வைரசால் தொற்று அதிகரித்ததையடுத்து சிங்கப்பூரில் கடந்த மாதம் சமூகக் கூட்டங்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும் மே மாதத்தில் மட்டும் உள்நாட்டு நிலவரப்படி 476 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.