டெங்கு காய்ச்சலோடு போராடும் சிங்கப்பூர்! டெங்கு கொசுக்களை தடுக்க புதிய வழி!

டெங்கு காய்ச்சலோடு போராடும் சிங்கப்பூர்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவி வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் ஒவ்வொரு அரசும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் சிங்கப்பூரில் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில், டெங்கு டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது.
அங்கு சுமார் 26,000 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு காரணம் கொரோனா ஊரடங்கால், பெரும்பாலான கட்டிடங்களில் ஆள் நடமாட்டம் இன்றி இருந்ததை கொசுக்கள் சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, இனப்பெருக்கம் செய்ததே என மருத்துவ சார்ந்த ஆய்வுகள் சார்ந்த விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றன.
இதற்கு தீர்வு காணும் வகையில் ஆய்வுக்கூடங்களில் செயற்கையான முறையில் பாக்டீரியாவை சுமந்து செல்லும் கொசுக்களை வளர்த்து டெங்கு பரவல் அதிகமுள்ள இடங்களில் அதனை பறக்க விடுகின்றனர். இதன் மூலம் டெங்கு கொசுக்களின் இனப்பெருக்கம் தடுக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : தமிழகத்தில் வெளுத்து வாங்கும் மழை முதல்..இந்தியாவுக்கு வரி விதித்த ட்ரம்ப் வரை!
April 3, 2025
சிக்ஸர் விளாசிய சால்ட்…ஸ்டிக்கை தெறிக்கவிட்ட சிராஜ்..பெங்களூருக்கு எமனாக மாறிய தருணம்!
April 3, 2025