சிங்கப்பூரில் பிரதமர் லீ செய்ன் லுாங் தலைமையிலான பீப்பிள் ஆக் ஷன்’ கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது.
சிங்கப்பூரில் பிரதமர் லீ செய்ன் லுாங் தலைமையிலான பீப்பிள் ஆக் ஷன் கட்சியின் ஆட்சி செய்து வருகிறது இவரது ஆட்சிக் காலமானது இன்னும் 10 மாதங்கள் முடிய இருக்கும் நிலையில் பிரதமர் லீ அந்நாட்டில் தேர்தலை முன்னதாகவே அறிவித்தார்.
இந்நிலையில் சிங்கப்பூரில்கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஓட்டுச் சாவடிகளின் எண்ணிக்கை 880ல் இருந்து 1100 ஆக அதிகரிக்கப்பட்டது. மேலும் பார்லி தேர்தல் ஆனது நேற்று நடைபெற்றது.
ஒரு ஓட்டு சாவடிக்கு சுமார் 2400 முதல் 3000 பேர் வரை வாக்காளர்கள் மட்டுமே ஓட்டளித்தனர். இந்நிலையில் காலை 8:00 மணிக்கு துவங்கிய ஓட்டுப் பதிவானது இரவு 8:00 மணி வரையும் நடந்தது.
மக்கள் ஆர்வமுடன் ஓட்டளிக்க நீண்ட வரிசையில் காத்திருந்தனர். காலை வேளையில் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஓட்டளிக்க நேரம் ஒதுக்கப்பட்டு நிலையில் அவர்களும் தங்களது ஒட்டை பதிவு செய்தனர்.
மேலும் ஒட்டு சாவடியில் முககவசமும் கையுறையும் வழங்கப்பட்டன. மக்கள் தனி மனித இடைவெளியை பின்பற்றி பாதுகாப்பாக ஓட்டு அளித்தனர்.இதனை தொடர்ந்து ஓட்டுகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகளும் வெளியிடப்பட்டன.
முடிவுகளில் ஆளும் பீப்பிள் ஆக் ஷன் கட்சி மொத்த உள்ள 93 இடங்களில் 83 இடங்களை பிடித்து மீண்டும் தனது ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. இக்கட்சி 61.24 சதவீத ஓட்டு விகிதம் பெற்றது. இது கடந்த 2015ல் (69.9%) பெற்ற ஓட்டு விகிதத்தை விடவிட குறைவு என்று கூறப்படுகிறது.
தேர்தல் வெற்றிக்குப் பின் செய்தியாளர்ளை சந்தித்த அந்நாட்டு இன்னாள் பிரதமர் லீ செய்ன் லுாங்:- பெரும்பான்மையுடன் வெற்றி பெறச் செய்ததற்கு அனைத்து மக்களுக்கும் நன்றி. ஓட்டு விகிதம் எதிர்பார்த்த அளவு இல்லை என்ற போதிலும், எங்கள் கட்சிக்கு மக்களிடம் ஆதரவு உள்ளதையே தேர்தல் முடிவுகள் காட்டுகிறது. இவ்வாறான கொரோனா நெருக்கடி காலத்திலும் மக்கள் எதிர்நோக்கிய வலியையும், பதற்றத்தையும் முடிவுகள் காட்டுகிறது என்று தெரிவித்தார்.அதே போல அந்நாட்டு எதிர்கட்சியான வொர்க்கர்ஸ் பார்ட்டி கட்சி, 10 இடங்களில் வெற்றி பெற்று உள்ளது. அக்கட்சியின் பிரித்தம் சிங், நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவராக பொறுப்பேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…