காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பேராசிரியரின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் திணறல்?
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சிங்கப்பூரில் நடைபெற்ற பொருளாதார கருத்தரங்கு ஒன்றில் பேராசிரியர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல், திணறினார். சிங்கப்பூர் சுற்றுப் பயணத்தின்போது கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
அப்போது, ”ஆசியா ரீபார்ன்” என்ற பொருளாதாரம் குறித்த புத்தகத்தை எழுதிய பி.கே.பாசு என்ற பேராசிரியர் (PK Basu), கேள்வி ஒன்றை எழுப்பினார்.
காங்கிரஸ் ஆட்சி செய்தபோது இந்தியாவில் தனிமனித வருமானம் மிகவும் குறைவாக இருந்தது என்றும், தற்போது தனிமனித வருமானம் வேகமாக வளர்ந்து வருகிறது எனவும் குறிப்பிட்டு, இது எப்படி என கேள்வி கேட்டார்.
இதில் குழம்பிப் போன ராகுல், கேள்வி புரியவில்லை என்று கூறிவிட்டு, பாட்டிலில் இருந்த தண்ணீரை குடித்தார். மறுபடியும் கேள்வி கேட்ட பின்னர், தனிமனித வருமான வளர்ச்சி பிரதமர் மோடியால் ஏற்பட்டிருக்காது என்று மறுத்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.