உச்சம் தொடும் பெட்ரோல் விலை.. பெட்ரோலை சேமிக்கும் எளிய வழிமுறைகள் இதோ!
இந்தியாவில் தினசரி பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்துக் கொண்டே வரும் நிலையில், பெட்ரோலை சேமிக்கும் எளிய வழிமுறைகள் குறித்து காணலாம்.
இந்தியாவில் நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து கொண்டே வரும் நிலையில், பைக் உரிமையாளர்களுக்கு பெரிய சிரமமாக இருக்கின்றது. இதனால் பலரும் மைலேஜ் கொடுக்கும் பைக்குகளையும், எலக்ட்ரிக் பைக்குகளையும் வாங்க முன்வருகின்றனர். இந்த நிலையில் பெட்ரோலை சேமிக்கும் எளிய வழிமுறைகளை நாம் காணலாம்.
பெட்ரோல் சேமிக்கும் டிப்ஸ்:
- நமது வாகனத்தில் சரியான அளவில் காற்றை நிரப்ப வேண்டும். அதிகப்படியாகவோ, குறைவாகவோ காற்று நிரப்பினால், மைலேஜ் கிடைக்காது அதுமட்டுமின்றி, டயர்களுக்கு சேதம் ஏற்படும்.
- புதிய டயர்கள் மாற்றும்பொழுது ஷோரூமில் பரிந்துரைத்த டயர்களை மட்டுமே பயன்படுத்தவும்.
- காலை நேரங்களில் மட்டும் பெட்ரோலை நிரப்புங்கள். ஏனெனில், எரிபொருளின் ஸ்பெசிபிக் க்ராவிட்டி காலையில் தான் அதிகமாக இருக்கும்.
- எப்பொழுதும் அரை டேங்கிற்கு மேல் பெட்ரோல் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். ஏனெனில், எரிபொருள் சரியான அழுத்ததில் செல்ல பெரிதும் உதவும்.
- வாகனத்தின் பராமரிப்பு மிகவும் அவசியமாகும். சரியான கால இடைவெளியில் பராமரித்தால் தேவையற்ற செலவுகளை தவர்க்கலாம். மேலும், செயல்திறனும் சிறப்பாக இருக்கும்.
- முதலில் ஸ்பீட் பெட்ரோல் உபயோகிக்க தொடங்கினால், நார்மல் பெட்ரோலை உபயோகிக்காதீர்கள். அவ்வாறு உபயோகித்தால் மைலேஜ் குறைவது மட்டுமின்றி, பைக் என்ஜினிற்கும் பாதிப்பு ஏற்படும்.