முடி கொட்டுதலை தடுக்க மற்றும் முடி அடர்த்தியாக வருவதற்கு எளிய நாட்டு மருத்துவம்..!

Default Image

முடி அடர்த்தியாக வருவதற்கு பூண்டு தோல் நல்ல பலனைத் தரும். கொத்துக்கொத்தாக முடி உதிர்வதைத் தடுக்கப் பூண்டுத்தோல் 50 கிராம் எடுத்து தேங்காய் எண்ணெயில் நன்கு வறுத்து, அதை அரைக்க வேண்டும்.

இதனை மறுபடியும் அதே எண்ணெயில் மைபோலக் கலந்து, தலையில் அதிக சொட்டையுள்ள இடத்தில தடவிவர வேண்டும். இபப்டி செய்தல முடி அடர்த்தி பெற்று விரைவில் புதிய முடிக்கற்றைகள் வளரும்.

கரிசலாங்கண்ணி இலையை (200 கிராம்) மையாக அரைத்து, அதனுடன் அரை லிட்டர் தேங்காய் எண்ணெய் சேர்த்து காய்ச்சி ஆற வைத்துக் கொள்ளுங்கள். இதனைதினமும் சிறிது தேய்த்து வந்தால் நரைமுடி கருப்பாக மாறிவிடும்.

கரிசலாங்கண்ணி சூரணத்தை கால் ஸ்பூன் எடுத்து, தேன் கலந்து சாப்பிட்டால் இள நரை பிரச்சனைக்கு முடிவு கட்டலாம். செய்வதற்கு எளிதுதானே.

அவுரி (நீலி), கரிசலாங்கண்ணி (பிருங்காதி) இந்த ரெண்டையும் சம அளவு எடுத்துக்கிட்டு, இவற்றை விட 3 மடங்கு அதிகமா தேங்காய் எண்ணெய் சேர்த்து காய்ச்சுங்கள். இதை தினமும் தலைக்கு தேய்த்து வந்தால் சகல முடி பிரசனைகளும் நரையும் குணமாகும்.

செம்பருத்தி பூ – 5 (புதியப் பூ அல்லது காய்ந்த பூ)
செம்பருத்தி இலை – 3 முதல் 5 இலைகள்
தேங்காய் எண்ணெய் – 1 கப்
துளசி – 5 இலைகள்
வெந்தயம் – சிறிதளவு

செம்பருத்தி பூ மற்றும் இலை, துளசிகளை சிறுசிறு துண்டுகளாக வெட்டி பிறகு மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அரைத்த விழுதை போட்டு மிதமான தீயில் வைத்து இதனுடன் வெந்தயம் மற்றும் துளசி இலைகளை சேர்த்த உடனேயேஅடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
ஆறியபின் 4 நாட்களில் வெயில் வைத்துவிடுங்கள். பிறகு வடிகட்டி ஒரு பாட்டிலில் சேகரித்து வைத்து கொள்ளவும்.
குளிக்க செல்லும் முன், சுமார் 10 நிமிடங்கள் ஊற வைக்கவும். உங்கள் முடி மற்றும் உச்சந்தலையில் இந்த எண்ணெய் மசாஜ் செய்து பிறகு தலைக்கு குளிக்கவும். வாரம் ஒரு முறை இந்த எண்ணெய்யை பயன்படுத்தி வந்தால் முடி கருப்பாகவும், அடர்த்தியாகவும் வளரும்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்