வீட்டிலேயே செய்யும் எளிய பாட்டி வைத்தியம்..!

Default Image

 

* பப்பாளி பழத்தை மசித்து முகம், கழுத்து, கைகளில் பூசி 1\2 மணி நேரம் ஊறவைத்து பின்முகம் கழுவ முக அழகு கூடும்.

* கண்ணாடி துண்டால் காயம் ஏற்பட்டால் வாழைபழத்தோலை அந்த காயத்தின் மீது வைத்து கட்டுங்கள், ரத்த போக்கு நின்று காயம் விரைவில் ஆறும்.

* கைகால்களில் வெடிப்பு குணமாக மாசிக்காய், கடுக்காய், விளக்கெண்ணை, வேப்ப எண்ணை, தேங்காய் எண்ணை சரிசமமாக கலந்த தடவ குணமாகும்.

* அரைக்கீரை இலை 10 கிராம், 2 கிராம் மிளகுடன் மைய அரைத்து, மோரில் கலந்து தினம் இருவேளை சாப்பிட சிறுநீர் எரிச்சல், அடிக்கடி சிறுநீர் போவது குணமாகும். தூக்கத்தில் சிறுநீர் செல்வது கட்டுப்படுத்தும்.

* உத்தாமணி இலை 10 கிராமை 100 மில்லி நீரில் சிறிது வசம்பு சேர்த்துக் காய்ச்சி காலை, மாலை 10 மில்லி சாப்பிட, மந்தம், வயிற்று உப்புசம், ஜீரண சக்தியின்மை குணமாகும்.

* ஊமத்தை இலை சாறு 100 மில்லி, தேங்காய் எண்ணெய் 200 மில்லி இரண்டையும் நன்கு கலந்து, நீர் வற்றும் வரை காய்ச்சி எடுத்துக்கொள்ளலாம். அழுகிய புண்கள், குழிப்புண், தீ புண், புரையோடிய புண்ணிற்கு மேல் உபயோகம் பயன்படுத்த குணமாகும்.

* எருக்கன் பழுத்த இலையை அனலில் வதக்கி எடுத்த சாறுடன் தேன், சுண்ணாம்பு சேர்த்து குழைத்து, உடலில் தோன்றும் சிறு சிறு அனல் கட்டிகளுக்கு தடவிட உடையும். குளவி தேனீ, தேள் கடித்த இடத்தில் தடவிட விஷம் இறங்கும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்