சிம்பு மற்றும் ஹன்சிகா நடிப்பில் உருவாகியுள்ள மஹா படத்திற்கான டப்பிங் பணிகளை சிம்பு முடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் சிம்பு சுசீந்திரன் அவர்களின் இயக்கத்தில் நடித்துள்ள “ஈஸ்வரன்” திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.அதனை தொடர்ந்து அவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு எனும் படத்தில் நடித்து வருகிறார்.
அதனை தொடர்ந்து மப்டி பட ரீமேக்கான பத்து தல படத்திலும், கௌதம் மேனன் இயக்கத்தில் ஒரு படத்திலும் சிம்பு நடிக்கவுள்ளார்.இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படங்களில் ஒன்று மஹா .ஜமீல் இயக்கத்தில் மதியழகன் தயாரிப்பில் சிம்புவுடன் ஹன்சிகா நடித்துள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். தம்பி ராமையா , ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தில் சிம்பு முதலில் கெஸ்ட் ரோலில் நடிப்பதாக இருந்தது.
ஆனால் படத்தின் கதையை மாற்றி சிம்பு இந்த படத்தில் ஹீரோவாக அதாவது பைலட் வேடத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது படப்பிடிப்பை முடித்த இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.இந்த நிலையில் மஹா படத்திற்கான டப்பிங் பணிகளை சிம்பு முடித்துள்ளதாகவும், படத்திற்கான ரிலீஸ் தேதியை படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த வருடம் ஜூன் மாதம் ஸ்டார்…
சென்னை : பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த…
டெல்லி : அண்மையில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றிய கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள் இருக்கும்…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று…
சென்னை : தேசிய கல்வி கொள்கையை ஆதரிக்கும் வகையில் உள்ள PM Shri திட்டத்தில் தமிழகத்தை இணைக்க மத்திய அரசு…
சென்னை : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாக திமுக தொடர்ந்து கூறிவருகிறது. இந்த தொகுதி…