மாநாடு படத்தில் உள்ள சிம்புவின் லுக் ட்ரிம் செய்த தாடியுடன் அனைவரும் கவரும் வகையில் மார்டன் லுக்கில் உள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
நடிகர் சிம்பு சுசீந்திரன் அவர்களின் இயக்கத்தில் “ஈஸ்வரன்” படத்தில் நடித்து முடித்து விட்டு , மாநாடு படத்தில் நடித்து வருகிறார்.சமீபத்தில் புதுச்சேரியில் நடந்து வந்த மாநாடு படத்தின் படப்பிடிப்பில் சிம்பு கலந்து கொண்டார்.
இதில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்ட பலர் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கலந்து கொண்டுள்ளனர் . வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தினை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார் .மேலும் பாரதிராஜா, கருணாகரன், பிரேம்ஜி,எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் .
மாநாடு படத்தில் சிம்பு இஸ்லாமிய இளைஞனான அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
சிம்பு அவர்கள் மீண்டும் சமூக ஊடகங்களில் வந்ததை தொடர்ந்து தனது புகைப்படங்களை பகிர்வதும் ,அது வைரலாகியும் வருகிறது .அது மட்டுமின்றி இவர் ஊரடங்கில் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது .
இந்த நிலையில் ஈஸ்வரன் படத்திற்காக தாடியுடன் இருந்த சிம்பு தற்போது அதனை ட்ரிம் செய்து ஒரு முஸ்லிம் இளைஞராக மாறியுள்ளார் . சிவப்பு நிற உடையில் செல்ஃபி எடுக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.தற்போது அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த பாலியல்…
சென்னை :திருவாதிரை ஸ்பெஷல் களி ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி-…
சென்னை: நடிகை நயன்தாராவின் 'Beyond the Fairy Tale' ஆவணப்படத்தில் 'நானும் ரவுடி தான்' படத்தின் காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாகக்…
சென்னை: ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிப்பில் 'KGF 2' திரைப்படம் கடந்த 2022ம் ஆண்டு வெளியானதைத் தொடர்ந்து அவரது அடுத்த…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த…
சென்னை: மகளிருக்காக தமிழக அரசு சார்பில் 'கலைஞர் மகளிர் உரிமைத்தொகை' திட்டதின் கீழ், ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி மகளிர்…