ஈஸ்வரன் படக்குழுவினருக்கு தீபாவளி பரிசாக 1 கிராம் தங்கம், வேட்டி சேலை, இனிப்புகள் என பலவற்றை சிம்பு வழங்கினார்.
நடிகர் சிம்பு மாநாடு படத்திற்கு முன்பு சுசீந்திரன் அவர்களின் இயக்கத்தில் “ஈஸ்வரன்”என்ற ஒரு கிராம கதை கொண்ட படத்தில் நடித்திருந்தார். இதற்காக அவர் உடல் எடையை குறைத்ததும், அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது. பாலாஜி காப்பா தயாரிக்க தமன்.எஸ் இசையமைக்கும் இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிகை நிதி அகர்வால் அவர்கள் நடிக்கிறார். மேலும் சிம்புவின் தங்கையாக நந்திதா ஸ்வேதா நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது .இப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆயுத பூஜையை முன்னிட்டு வெளியாகி வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின் ஷூட்டிங் கடந்த மாதம் திண்டுக்கல்லில் தொடங்கி 40 நாட்கள் படப்பிடிப்பிற்கு பின்னர் வெள்ளிக்கிழமை அன்று முடிவடைந்தது . அதனையடுத்து அடுத்தகட்ட பணியான டப்பிங் பணிகளையும் சிம்பு அவர்கள் முடித்து விட்டதாக நேற்றைய தினம் அறிவித்திருந்தார். அடுத்தாண்டு பொங்கல் விருந்தாக வெளியாகவிருக்கும் . இந்த படத்தினை பொங்கலை முன்னிட்டு ரீலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதுடன் டீசரை தீபாவளி அன்று வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் ஈஸ்வரன் படக்குழுவினருக்கு சிம்பு அவர்கள் தீபாவளி பரிசு வழங்கியுள்ளார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒரு கிராம் தங்கம், வேட்டி சேலை , இனிப்புகள் என பலவற்றை ஈஸ்வரன் படத்தில் பணியாற்றிய 400 பேருக்கு பரிசாக சிம்பு வழங்கியுள்ளார். அதனுடன் படத்தில் நடித்த துணை நடிகர்களுக்கு வேட்டி சேலை, இனிப்புகள் என தீபாவளி பரிசை வழங்கினார் . இதனால் சிம்புவிற்கு ஈஸ்வரன் படக்குழுவினர் நன்றியை தெரிவித்துள்ளனர் .
சென்னை : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மும்மொழிக் கொள்கை குறித்த விவாதத்தில் பேசிய மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான், திமுக…
கோவை : கடந்த மார்ச் 7ஆம் தேதியன்று இஸ்லாமியர்கள் விழாவான ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சென்னை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ஆம் கட்ட அமர்வு தொடங்கியுள்ளது. இதில் இன்று கேள்வி பதில் நேரத்தில்…
துபாய் : நேற்று இந்திய கிரிக்கெட் அணி, கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் 2வது ஐசிசி கோப்பையை கைப்பற்றியது. 2025…
துபாய் : துபாய் சர்வதேச மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா நியூசிலாந்தை நான்கு…
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. இதில் கலந்து கொண்டு மத்திய கல்வி…