மாநாடு திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சிம்பு நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்தில் உருவாகி வரும் திரைப்படம் “மாநாடு”. இந்த படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். மேலும் எஸ் ஏ சந்திரசேகர், பாரதிராஜா, கருணாகரன், பிரேம்ஜி, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படம் வரும் நவம்பர் மாதம் 4-ஆம் தேதி தீபாவளி அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
ஏற்கனவே படத்திலிருந்து வெளியான டீசர் மற்றும் முதல் பாடல் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வரும் நிலையில், படத்தின் டிரைலருக்காக ரசிர்கர்கள் காத்திருந்தார்கள்.
ரசிகர்களின் எதிர்பார்பை பூர்த்தி செய்யும் வகையில், மாநாடு படத்தின் டிரைலர் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாநாடு திரைப்படத்தின் டிரைலர் வரும் அக்டோபர் மாதம் 2-ஆம் தேதி வெளியாகும் என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ட்வீட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
சென்னை : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ இன்று நாடாளுமன்றத்தில்நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், வருமானவரி விலக்கு…
சென்னை : தமிழகம் முழுவதும் 9 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 36 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை…
புதுச்சேரி : பல மொழிகளில் ஹிட் பாடல்களை பாடி ரசிகர்களுக்கு பிடித்த பாடகர்களில் ஒருவராக இருக்கும் பாடகர் உதித் நாராயணன் ரசிகர்களை…
சென்னை : கடந்த ஒரு மாதத்தில் தங்கம் விலை ஜெட் வேகத்தில் அதிகரித்து வருகிறது. இன்றைய தினம் மத்திய பட்ஜெட் தாக்கல்…
புனே : இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்று விட்டது. மூன்று போட்டியில் வெற்றிபெற்று 3-1…
சென்னை : நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். தாக்கல் செய்ததை…