சிம்புவின் பிறந்தநாள் ஸ்பெஷலாக பத்து தல படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு.!சிம்புவின் பிறந்தநாள் ஸ்பெஷலாக பத்து தல படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு.!

சிம்புவின் பிறந்தநாள் ஸ்பெஷலாக பத்து தல படக்குழுவினர் ஸ்பெஷல் வீடியோ ஒன்றை வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர்.
நடிகர் சிம்பு சுசீந்திரன் அவர்களின் இயக்கத்தில் நடித்துள்ள “ஈஸ்வரன்” திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.அதனை தொடர்ந்து அவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு எனும் படத்தில் நடித்து வருகிறார்.
அதனை தொடர்ந்து மப்டி பட ரீமேக்கான பத்து தல படத்தில் சிம்பு நடிக்கவுள்ளார்.கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.ஸ்டுடியோ கிரீன் தயாரிக்கும் இந்தப் படத்தினை சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய வெற்றி படங்களை இயக்கிய கிருஷ்ணா இயக்குகிறார் .
இந்த நிலையில் நாளை சிம்பு தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார் . ரசிகர்களுக்கு அவரது பிறந்தநாள் ட்ரீட்டாக மாநாடு படத்தின் டீசர் நாளை வெளியாக உள்ளது.அதே போன்று பத்து தல படக்குழுவினர் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு ஸ்பெஷல் வீடியோ ஒன்றை நாளை நள்ளிரவு 12.06 மணிக்கு வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இது சிம்பு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.
STR fans! Keep calm and stay tuned for @SilambarasanTR_ special birthday video releasing at midnight 12:06am pic.twitter.com/BWvoDsvG79
— Studio Green (@StudioGreen2) February 2, 2021