திருச்செந்தூரில் முகாமிட்டுள்ள சிம்பு.! விறுவிறு வேகத்தில் ‘வெந்து தணிந்தது காடு’.!

வெந்து தணிந்தது காடு படத்தின் படப்பிடிப்பு நேற்று திருச்செந்தூரில் தொடங்கியது.
நடிகர் சிம்பு மாநாடு படத்தில் நடித்துமுடித்துள்ளார். இந்த படத்தை தொடர்ந்து வெந்து தணிந்தது காடு, பத்து தல ஆகிய திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் கௌதம் வெந்து தணிந்தது காடு படத்தை இயக்குனர் கெளதம் மேனன் இயக்குகிறார். இந்தத் திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார். படத்தை ஐசரி கணேசன் தயாரிக்கிறார்.
இந்த படத்திற்கு முதலில் “நதிகளிலே நீராடும் சூரியன்” என்று தலைப்பு வைக்கப்பட்டது. அதன் பிறகு நேற்று “வெந்து தணிந்தது காடு” என்று தலைப்பு மாற்றப்பட்டு பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் மிகவும் இதுவரை இல்லாத அளவிற்கு வித்தியாசமான தோற்றத்தில் சிம்பு இருந்தார். இதனால் படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று திருச்செந்தூரில் தொடங்கியது. விறுவிறுப்பாக இந்த திரைப்படத்தில் நடித்து முடித்து விட்டு சிம்பு பத்து தல படத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
தீவிரவாத தாக்குதல்…, நடிகர் அஜித் கேட்டு கொண்டது இதைத்தான்!
April 29, 2025
குஜராத்தை கதறவிட்ட 14 வயது சிறுவன்…ராஜஸ்தான் த்ரில் வெற்றி!
April 28, 2025