15 கிலோ குறைந்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறிபோன சிம்பு.! வைரலாகும் புகைப்படம்

Default Image

நடிகர் சிம்பு “வெந்து தணிந்தது காடு” படத்திற்காக 15 கிலோ உடல் எடையை குறைத்துள்ளார். 

இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்து வரும் திரைப்படம் வெந்து தணிந்தது காடு.  இந்த படத்தை வேல்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த 6- ஆம் தேதி வெளியானது.

பர்ஸ்ட் லுக் போஸ்டரில் மிகவும் இளமையான தோற்றத்தில் வித்தியாசமாக சிம்பு இருந்தார். இதன் மூலம் இந்த திரைப்படம் வித்தியாசமானது என்பதை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் உணர்த்தியது.

இந்த நிலையில் படத்தின் படப்பிடிப்பு விறு விறுப்பாக திருச்செந்தூரில் நடந்து வருகிறது. இதனையடுத்து இந்த படத்திற்காக நடிகர் சிம்பு 15 கிலோ உடல் எடையை குறைத்துள்ளார். அதற்கான புகைப்படமும் தற்போது வைரலாகி வருகிறது.

silambarasan

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்