சிம்பு அணிந்த வாட்ச் என்ன தெரியுமா? விலை மற்றும் முழு விவரம் இதோ!

Default Image

நடிகர் சிம்பு, தற்பொழுது மாநாடு என்ற படத்தில் நடித்து வருகிறார். புதுச்சேரியில் நிகழும் படப்பிடிப்பில் கலந்துகொண்ட அவர், இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படம், இணையத்தில் வைரலாக, பலருக்கும் அவர் அணிந்த வாட்ச் என்ன மாடல்? அதன் விலை என்ன உள்ளிட்ட கேள்விகள் எழுந்து, அதுதொடர்பான பல பதிவுகளை பதிவிட்டுக்கொண்டு வருகின்றனர்.

அவர் அணிந்துள்ள அந்த வாட்ச், ஆப்பிள் நிறுவனத்தின் ஆப்பிள் சீரிஸ் 6 ரக வாட்ச் ஆகும். ஆப்பிள் நிறுவனம் தனது டைம் ஃப்ளைஸ் (Time flash) நிகழ்வின் போது புதிய ஆப்பிள் வாட்ச் சீரியஸ் மற்றும் ஐ-பேட் மாடல்களை செப்டம்பர் 15 ஆம் தேதி அறிமுகப்படுத்தியது.

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 6:

இந்த ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 6, ஆக்ஸிமீட்டர் உள்ளிட்ட பல புதிய அம்சங்களுடன் வெளியானது. இந்த மாடல், அதன் முந்தைய ஜெனெரேஷன் வாட்ச் ஆனா ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 5 போல இருக்கின்றது. ஆனால் அதனைவிட நிறைய மேம்படுத்தப்பட்ட வசதிகளை கொண்டது. இதில் இருக்கும் ஆக்சிமீட்டர் சென்சாரால் நமது இரத்த ஆக்ஸிஜன் அளவை கணக்கிட முடியும். இந்த ஆப்பிள் சீரிஸ் 6 வாட்ச்-ல் எஸ்6 எனப்படும் ப்ராசசரால் இயக்கப்படுகிறது. இதன் செயல்திறன் மிகவும் வேகமாக இருப்பதாகவும், ஐ-போன்களில் வழங்கப்படும் ஏ13 பயோனிக் சிப்பின் ஆப்டிமைஸ்டு வெர்ஷன் என கூறப்படுகிறது.

இதன் பேட்டரியை பொறுத்தளவில் 18 மணிநேரம் நிற்கும் எனவும், அதனை சார்ச் செய்ய magsafe சார்ஜ்ர் வழங்கப்படும். டிஸ்பிளேயை பொறுத்தளவில், 1.78 இன்சஸ் கொண்ட ரெட்டினா o-led டிஸ்பிலே கொண்டுள்ளது. இதன் பிரைட்னஸ், 1000 nits எனவும், 448×368 பிக்ஸல் டென்சிட்டி தீர்மானம் கொண்டுள்ளது. ஸ்மார்ட்வாட்ச் 40 மிமீ மற்றும் 44 மிமீ என்ற இரண்டு அளவுகளில் வருகிறது. மேலும், நீர் மற்றும் தூசியிலிருந்து பாதுகாக்கும் வகையில், IP 68 சான்றிதழையும் பெற்றுள்ளது.

விலை:

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 6 (ஜி.பி.எஸ்) மாடல்: ரூ.40,900

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 6 (ஜி.பி.எஸ் + செல்லுலார்) ரூ.49,900

என்ற விலையில் இந்தியாவில் விற்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tvk vijay donald trump
UGC CM Stalin
Rishabh Pant
Parandur Protest
life imprisonment
TVK Leader Vijay - TN CM MK Stalin
Vijay