மாப்பிள்ளையுடன் சிரித்து பேசியப்படி காரில் ஊர் சுற்றும் சிம்பு.! வைரல் வீடியோ உள்ளே.!
நடிகர் சிம்பு தனது தங்கை இலக்கியாவின் மகனான ஜேசனுடன் சிரித்து பேசிப்படி காரில் ஊர் சுற்றும் வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
இயக்குனர் சுசீந்திரன் அவர்களின் ஈஸ்வரன் படத்தின் படப்பிடிப்பை முடித்த சிம்பு சமீபத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் மாநாடு படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார் .அதன் பின்னர் சில்லுனு ஒரு காதல் படத்தை இயக்கிய கிருஷ்ணாவின் மஃப்டி பட ரீமேக்கில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
சிம்பு தற்போது படங்களில் அடுத்தடுத்து நடித்து வந்தாலும் குடும்பத்தினருடன் ஜாலியாக இருந்து வருகிறார்.அதுவும் அவரது சகோதரி மகனுடன் லூட்டி அடிப்பது வழக்கமான ஒன்று தான் . அந்த வகையில் தற்போது தனது தங்கை இலக்கியாவின் மகனான ஜேசனுடன் காரில் செல்லும் வீடியோவை சிம்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில் காரை ஓட்டும் இருக்கையில் அமர்ந்து கொண்டு சிம்பு , அருகில் நிற்கும் காரில் உள்ளவர்களுக்கு ஹாய் சொல்லி விட்டு தனது மாப்பிள்ளையான ஜேசனுடனும் ஹாய் கூற சொல்ல அவரும் ஹாய் காட்டுகிறார் . அதனையடுத்து அவர் ஜேசனிடம் அந்த காருக்கு செல்கிறாயா என்று குறும்புதனமாக கேட்கிறார் . மாப்பிள்ளையுடன் அழகாக சிரித்து பேசும் சிம்புவின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
View this post on Instagram