நடிகர் சிம்புவின் திருமணம் விரைவில் இருக்கும் என்று நடிகரும், அவரின் நெருங்கிய நண்பருமான விடிவி கணேஷ் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் பல சர்ச்சைகளுக்கு உள்ளனாலும் பிரபல முன்னணி நடிகராக திகழ்பவர் தான் சிம்பு. அவருக்கென்றே ரசிகர்கள் கூட்டம் அதிகமாகவே உள்ளது என்று கூறலாம். இவர் தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடித்து கொண்டிருக்கும் திரைப்படம் மாநாடு.இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கி சுரேஷ் காமாட்சி தயாரித்து இருக்கிறார். இதனையடுத்து, இந்த படத்தின் படப்பிடிப்பு பல சர்ச்சைக்கு பின்னர் 2 மாதங்களுக்கு முன்பு தான் தொடங்கப்பட்டது . தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக சிங்கப்பூரில் நடந்து வந்த படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில் தற்போது இவர் விரைவில் திருமணம் செய்ய போவதாக சில தகவல்கள் கசிந்துள்ளது. சிம்பு தாய் உஷா, அவரது நெருங்கிய சொந்தக்கார பெண் ஒருவரை மகனுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது. ஆனால் இது குறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, சிம்புவின் நெருங்கிய நண்பரான விடிவி கணேஷ் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் விரைவில் சிம்புவிற்கு திருமணம் இருக்கும் என்றும், அதனை குறித்த அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளார். இதிலிருந்து சிம்புவிற்கு விரைவில் திருமணம் இருக்கும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…