மாநாடு படத்திலிருந்து யாரும் அறியாத தகவலை வெளியிட்ட சிம்பு .!
மாநாடு படத்தில் சிம்பு நடிக்கும் கதாபாத்திரத்தின் பெயர் அப்துல் காலிக் என்று அவரே தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
நடிகர் சிம்பு மாநாடு படத்திற்கு முன்பு சுசீந்திரன் அவர்களின் இயக்கத்தில் “ஈஸ்வரன்”என்ற ஒரு கிராம கதை கொண்ட படத்தில் நடித்து முடித்ததுடன், அதற்கான டப்பிங் பணிகளையும் முடித்துள்ளார் . அதனையடுத்து நேற்று முதல் புதுச்சேரியில் சிம்பு நடிக்கும் மாநாடு படத்தின் படப்பிடிப்பானது தொடங்கப்பட்டதாக கூறப்பட்டது.
இதில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்ட பலர் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கலந்து கொண்டுள்ளனர் . வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தினை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார் . மேலும் பாரதிராஜா, கருணாகரன், பிரேம்ஜி, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் . மேலும் படக்குழுவினரின் பாதுகாப்பை கவனிக்க சித்த மருத்துவர் வீரபாபுவிடம் பொறுப்பை தயாரிப்பாளர் ஒப்படைத்துள்ளதாகவும் கூறப்பட்டது .
இந்த நிலையில் நேற்றைய தினம் சிம்பு தனது டுவிட்டர் பக்கத்தில் அவரது புகைப்படம் ஒன்றை பகிர்ந்து இதுவரை யாருக்கும் தெரியாத தகவல் ஒன்றை கூறியுள்ளார் . ஏற்கனவே மாநாடு படத்தில் சிம்பு இஸ்லாமிய இளைஞனாக நடிப்பதாக கூறி வந்த நிலையில் , சிம்புவின் கதாபாத்திரத்தின் பெயரை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் . அதாவது சிம்பு நடிக்கும் கதாபாத்திரத்தின் பெயர் அப்துல் காலிக் என்று வெளிப்படுத்தியுள்ளார் . மேலும் சிம்புவின் முகம் தெரியாத புகைப்படத்தையும் பகிர்ந்த அவரது ட்வீட் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
Name : #AbdulKhaaliq
Place : #Pondicherry
Mission : #Maanaadu #Atman #SilambarasanTR #STR @vp_offl #AvpPolitics @sureshkamatchi @thisisysr @kalyanipriyan @iam_SJSuryah pic.twitter.com/S6fexrOH6u— Silambarasan TR (@SilambarasanTR_) November 9, 2020