மிஷ்கின் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகும் படத்தில் ஸ்ருதிஹாசனை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
நடிகர் சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். மேலும் இவர் மிஷ்கின் இயக்கத்தில் ஒரு படத்திலும், கௌதம் மேனனின் விண்ணை தாண்டி வருவாயா-2 படத்திலும் கமிட்டாகியுள்ளதாக கூறப்படுகிறது .அது மட்டுமின்றி ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் கௌதம் கார்த்திக்குடன் இணைந்து ‘மஃப்டி’ என்ற திரைப்படத்தில் நடிக்க சிம்பு ஒப்புக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் மிஷ்கின் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகும் படத்தில் கதாநாயகி வேடத்தில் ஸ்ருதிஹாசனை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே சிம்புவின் ‘இது நம்ம ஆளு’ படத்தில் ஆண்ட்ரியா நடித்துந கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க வைக்க அணுகியது ஸ்ருதிஹாசனை தானாம். அது மட்டுமின்றி ரஜினி, கமல் மற்றும் ஸ்ரீபிரியா நடிப்பில் வெளியான ‘அவள் அப்படிதான்’ படத்தின் ரீமேக்கிலும் சிம்பு, துல்க்கர் சல்மான் மற்றும் ஸ்ருதிஹாசன் நடிப்பதாக கூறப்படுகிறது. தற்போது ஸ்ருதிஹாசன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய் சேதுபதியின் லாபம் படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஜெய்ப்பூர் : இன்றைய ஐபிஎல் தொடரின் ஆட்டத்தில் சஞ்சு தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரஜத் படிதார் தலைமையிலான ராயல்…
திருவனந்தபுரம் : தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலம் தாழ்த்துகிறார், அரசியலமைப்பு சட்ட…
ஜெய்ப்பூர் : இன்றைய ஐபிஎல் தொடரின் ஆட்டத்தில் சஞ்சு தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரஜத் படிதார் தலைமையிலான ராயல்…
ஜெய்ப்பூர் : இன்று (ஏப்ரல் 13) ஐபிஎல் 2025-ல் 28வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணியும் , ராயல்…
மதுரை : கோவை போலீசார் இன்று ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்ததாக செய்திகள் வெளியாகின. அதில், மதுரையை சேர்ந்த ரவுடி…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி ஆட்சி தான். ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு போன்ற கோரிக்கைகள் தமிழக…