சிவகார்த்திகேயனுடன் மோதும் சிம்பு…! டாக்டர் vs மாநாடு…? சூப்பர் அப்டேட்..!
சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் படமும் சிம்பு நடித்து வரும் மாநாடு படமும் ஒரே நாளில் வெளியாகவுள்ளதாக தகவல்.
கடந்த ஆண்டு ஏற்பட்ட கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக திரையரங்குகளுள் மூடப்பட்ட பல படங்கள் ஓடிடியில் வெளியானது. அதனை தொடர்ந்து இந்த வருடம் மீண்டும் திரையரங்குகள் திறக்கப்பட்டு 50 % இருக்கையாளர்களுடன் மாஸ்டர் படம் வெளியானது. மாஸ்டர் படத்தை தொடர்ந்து, ஈஸ்வரன், களத்தில் சந்திப்போம், சக்ரா, பாரிஸ் ஜெயராஜ், நெஞ்சம் மறப்பதில்லை ஆகிய படங்கள் வெளியாகி வெற்றிநடைபோட்டு வருகிறது.
இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர், விக்ரம் நடித்துள்ள கோப்ரா, தனுஷ் நடித்துள்ள கர்ணன், கார்த்தி நடித்துள்ள சுல்தான், ஆகிய படங்கள் ரிலீசாக உள்ளது. இதில் டாக்டர் திரைப்படம் வருகின்ற 26 ஆம் தேதி திரையரங்குககளில் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்திருந்தார்கள்.
இந்த நிலையில் ஏப்ரல் 6-ம் தேதி தமிழகத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்ட சில படங்களின் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் டாக்டர் படம் வருகின்ற மே மாதம் 12 ஆம் தேதி வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதைபோல் அதே தினத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் மாநாடு படமும் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதைபோல் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கர்ணன் படமும் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சுல்தான் திரைப்படமும் அறிவித்த தேதியில் வெளியாவதில் எந்த சந்தகேமுமில்லை.