நடிகர் சிம்பு “அன்பானவன் அடங்காவதவன் அசராதவன்” படத்தில் நடித்தற்கு தனக்கு முழு சம்பளத்தையும் தரவில்லை என படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் மீது நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்தார்.இப்படத்தில் ஏற்பட்ட இழப்பை நடிகர் சிம்புவிடம் இருந்து வசூல் செய்து தருமாறு மைக்கேல் ராயப்பன் புகார் கொடுத்தார்.
இந்த விவகாரத்தில் மைக்கேல் ராயப்பன் ஊடகங்களில் தனக்கு கேட்ட பெயர் ஏற்படுத்தும் விதமாக பேட்டி அளித்ததாகவும் ,அதனால் மைக்கேல் ராயப்பனிடம் இருந்து ரூ.1 கோடி மன நஷ்ட ஈடு வழங்கவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் புகார் கொடுத்தார்.
இந்த மனுவில் நடிகர் சங்கத்தின் பொதுசெயலாளர் விஷாலை எதிர்மனுதாரராக சார்ந்து இருந்தார்.இந்நிலையில் இந்த மனு நேற்று நீதிபதி செந்தில்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது நடிகர் சங்கத்தின் நிர்வாகியாக தமிழக அரசு சிறப்பு அதிகாரியை நியமித்து உள்ளது.
இப்போது நடிகர் விஷால் நடிகர் சங்கத்தின் நிர்வாகியாக இல்லை என்று கூறப்பட்டது.இதை ஏற்று கொண்ட நீதிபதி இந்த வழக்கில் நடிகர் சங்கத்தின் நிர்வாகியாக நியமிக்கப்பட்ட சிறப்பு அதிகாரியை எதிர்மனுதாரராக சேர்க்கவும் ,நடிகர் விஷாலின் பேரை நீக்கவும் உத்தரவு விடப்பட்டது.மேலும் இந்த வழக்கை ஜனவரி 03-ம் தேதி தள்ளிவைக்கப்பட்டது.
சென்னை : நானும் ரவுடிதான் படத்தில் இடம்பெற்ற பாடல்களை தங்களுடைய திருமண வீடியோவில் பயன்படுத்த தனுஷ் அனுமதி கொடுக்கவில்லை என்பதாக கூறி…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி இன்று (நவம்பர் 16) முதல் வரும் நவம்பர் 21 வரையில் 6 நாள்…
சென்னை : குமரிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று முதல்…
திருவாரூர் : வருகின்ற நவம்பர் 30-ஆம் தேதி தமிழ்நாடு வருகிறார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு. திருவாரூரில் உள்ள தமிழ்நாடு…
சென்னை : பிரபல லாட்டரி தொழிலதிபர் மார்ட்டின் தொடர்புடைய பல்வேறு இடங்களில் கடந்த நவம்பர் 14ஆம் தேதி முதல் அமலாக்கத்துறையினர் …
சென்னை : நயன்தார விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வரும் நவம்பர் 20-ஆம் தேதி வெளியாகவுள்ளது.…