புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக சிம்பு பட நடிகை செய்த உதவி.!
நடிகை வரலட்சுமி தனது சேவை அமைப்பின் மூலம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.
கொரோனா வைரஸ் காரணமாக ஜூன் 30 வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஒரு சில தளர்வுகளை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. மேலும் இந்த பொது முடக்கத்தால் பலர் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வாழ்வு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வேலையில்லாமல் கைகளில் காசு இல்லாமல் பட்டினியில் வாடும் இவர்களுக்காக பலர் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது சிம்புவின் போடா போடி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, தற்போது பிரபல நடிகையாக வலம் வருபவர் தான் வரலட்சுமி. இவர் நடத்தி வரும் சேவ் சக்தி பவுண்டேஷன் மூலம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்துள்ளார். தங்கள் சொந்த ஊருக்கு செல்லும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வரலட்சுமியின் தாயான சாயா தேவி மற்றும் சேவ் சக்தி உறுப்பினர்கள் இணைந்து, அவர்கள் ஊருக்கு செல்லும் வரை தேவையான உணவு மற்றும் மருத்துவ பொருட்களையும், தண்ணீர், முககவசம் ஆகியவற்றையும் வழங்கி உதவியுள்ளனர். ஏற்கனவே சேவ் சக்தி அமைப்பின் மூலம் பசியால் வாடும் வாயில்லா ஜீவன்களுக்கு உதவி செய்தது குறிப்பிடத்தக்கது.
Thanks to My mother and all the save shakti volunteers for sending these migrants off to their homes..thank you @SBWHealth and #gautham @epigamia they work tirelessly everyday God bless you all..!! #superheroes pic.twitter.com/rLE5vZ64cM
— ???????????????????????????????????? ???????????????????????????????????????????? (@varusarath) June 5, 2020