சிம்பு நடிப்பில் வெளியான மன்மதன் திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் வருகின்ற 19 ஆம் தேதி ரீ ரிலீசாக உள்ளது.
இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் 14 ஆம் தேதி வெளியான திரைப்படம் ஈஸ்வரன். நடிகர் சிம்புவிற்கு நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த படம் வெளியானது. இந்த படம் சிம்புவிற்கு சிறந்த கம்பேக் படமாக இருக்கும் என கூறிவந்த நிலையில், ரசிகர்களுக்கு மத்தியில் ஒரு கலவையான விமர்சனத்தை பெற்றது. வசூல் ரீதியில் ஒரு பரவலாக வசூல் செய்தது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக மாநாடு படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் சிம்புவிற்கு கம் பேக் கொடுக்கும் என்று அணைத்து ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ளார்கள்.
இதனை தொடர்ந்து சிம்பு ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில், மன்மதன் படம் ரி ரிலீசாக உள்ளது. ஆம் கடந்த 2004 ஆம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியான திரைப்படம் மன்மதன். இந்த படத்தை அவரே இயக்கியிருந்தார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று படத்திற்கான இரண்டாவது பாகம் உருவாகுமா என்று எதிர்பார்த்து காத்துள்ளார்கள். இந்த நிலையில் இந்த திரைப்படம் வருகின்ற 19 ஆம் தேதி திரையரங்குகளில் மீண்டும் ரீ ரிலீசாக உள்ளது. இதனால் சிம்பு ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளார்கள்.
இலங்கை : தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கச்சத்தீவு அருகே…
குஜராத் : இங்கிலாந்துக்கு எதிரான இந்திய டி20 அணியில் சேர்க்கப்பட்ட முகமது ஷமி ஏற்கனவே முதல் இரண்டு போட்டிகளில் விளையாடவில்லை. எனவே,…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடர்ச்சியாக திமுகவை விமர்சனம் செய்து வரும் நிலையில், அவருக்கு திமுக சேர்ந்த அமைச்சர்கள்…
சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க திட்டம் கைவிடப்பட்ட காரணத்தால் அதற்கு விழா…
டெல்லி : திருமணம், கலாச்சாரம், பண்பாடு என தொன்மை வாய்ந்த இந்திய சமூகம் தற்போது வேகமாக நகர்ந்து வரும் நவீன…
மலேசியா : சினிமாவில் ஹீரோ எப்படி தனது குடும்பத்தினரையும் நண்பர்களையும் வில்லனிடமிருந்து காப்பாற்றுகிறார். அதேபோல், திரைப்படங்களில் வருவதுபோல் வில்லனாக நடிக்க,…