நடிகர் தவசிக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கிய சிம்பு.!
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நடிகர் தவசிக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கி சிம்பு உதவியுள்ளார்.
வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், கொம்பன் உள்ளிட்ட வெற்றி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகர் தவசி தற்போது முகத்தில் மீசை இன்றி, முடியின்றி மிகவும் மெலிந்து எலும்பும் தோலுமாக காணப்படுகிறார் . புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பணமின்றி அவதிப்படுவதாக தகவல்கள் வெளியானதை அடுத்து அவருக்கு தமிழ் திரையுலகில் உள்ளவர்கள் உதவ கோரி வருகின்றனர்.
அதனை தொடர்ந்து திருப்பரங்குன்றம் திமுக எம்எல்ஏ-ஆன மருத்துவர் சர்வணன் தனது மருத்துவமனையில் தவசியை அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார். மேலும் பல பிரபலங்கள் தங்களால் இயன்ற தொகையை வழங்கி உதவி வருகின்றனர். ஏற்கனவே சூரி சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் நிதியுதவி வழங்கி உதவிய நிலையில் தற்போது நடிகர் சிம்பு ரூ.1 லட்சம் வழங்கி உதவியுள்ளார் . மேலும் தவசிக்கு வங்கி பரிவர்த்தனை மூலம் பணத்தை கொடுத்துள்ளார்.