ஈஸ்வரன் படத்தின் டப்பிங் பணிகளை முடித்தார் சிம்பு.!
ஈஸ்வரன் படத்தின் டப்பிங் பணிகளை சிம்பு அவர்கள் முடித்துள்ளார்.
நடிகர் சிம்பு மாநாடு படத்திற்கு முன்பு சுசீந்திரன் அவர்களின் இயக்கத்தில் “ஈஸ்வரன்”என்ற ஒரு கிராம கதை கொண்ட படத்தில் நடித்து முடித்துள்ளார் . பாலாஜி காப்பா தயாரிக்க தமன்.எஸ் இசையமைக்கும் இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிகை நிதி அகர்வால் அவர்கள் நடித்துள்ளார்
மேலும் சிம்புவின் தங்கையாக நந்திதா ஸ்வேதா நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. இப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆயுத பூஜையை முன்னிட்டு வெளியாகி வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின் ஷூட்டிங்கும் திண்டுக்கல்லில் வைத்து மிக ஆர்வமாக நடைபெற்று வந்தது.35 நாட்கள் படப்பிடிப்பு என்று கூறப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் ஷுட்டிங் அனைத்து முடித்து விட்டு அடுத்த கட்ட பணியை தொடங்கியுள்ளதாக சிலம்பரசன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தற்போது ஈஸ்வரன் படத்தில் தனக்கான டப்பிங் பணிகளை முடித்து விட்டதாக கூறியுள்ளார். அது தொடர்பான புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார் . அடுத்தாண்டு பொங்கல் விருந்தாக வெளியாகவிருக்கும் .இந்த படத்தினை பொங்கலை முன்னிட்டு ரீலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதுடன் டீசரை தீபாவளி அன்று வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
Finally done with #Dubbing for #Eeswaran #Thankful #Greatful & #TrulyBlessed #SilambarasanTR#Atman #STR pic.twitter.com/hAhQAnyGGM
— Silambarasan TR (@SilambarasanTR_) November 8, 2020