சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள ஈஸ்வரன் திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளனர்.
நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகி வந்த மாநாடு திரைப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா வைரஸ் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் ஷூட்டிங்கை வருகிற நவம்பர் மாதம் தான் துவங்கவுள்ளனர். அதற்கிடையில் இருக்கக்கூடிய இந்த ஒரு மாத இடைவெளியில் நடிகர் சிம்பு இயக்குனர் சுசீந்திரன் அவர்களின் இயக்கத்தில் ஒரு கிராம கதை கொண்ட படத்தில் நடிக்க இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான ஷூட்டிங்கும் திண்டுக்கல்லில் வைத்து மிக ஆர்வமாக நடைபெற்று வருகிறது.
இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிகை நிதி அகர்வால் அவர்கள் நடிக்கிறார்.மேலும் சிம்புவின் தங்கையாக நந்திதா ஸ்வேதா நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் சிம்பு தற்போது நடிக்கும் கொண்டிருக்கும் படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. “ஈஸ்வரன்”என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தினை பாலாஜி காப்பா தயாரிக்க தமன்.எஸ் இசையமைக்கிறார். கழுத்தில் பாம்புடன் அசராமல் நிற்கும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.
டெல்லி : ஐபிஎல் 2025 -இன் 3-2வது போட்டி இன்று டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : அஜித் -ஆதிக் கூட்டணியில் வெளியான 'குட் பேட் அக்லி' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அஜித்தின்…
டெல்லி : ஐபிஎல் 2025 தொடரில், அம்பயர்கள் வீரர்கள் களத்திற்கு வருவதற்கு முன்பு அவர்களுடைய பேட்டுகளை களத்தில் பரிசோதிக்கும் புதிய…
சென்னை : தமிழக பாஜகவின் 13-வது தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றுக் கொண்டார். சென்னை கமலாலயத்தில் நடைபெற்ற இந்த பதவியேற்பு…
சென்னை : தமிழக அரசின் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் மெனுவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சமூக நலன் மற்றும் மகளிர்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 245% வரை வரி விதிக்கப்படும் என…