மாநாடு படம் கைவிடப்பட்டதா?! என்ன நடக்கிறது சிம்பு – வெங்கட்பிரபுக்கு இடையில்?!
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக இருந்த படம் மாநாடு. இப்படத்திற்காக சிம்பு உடல் எடையை குறைத்து வெளிநாடு சென்று சிறப்பு பயிற்சி எல்லாம் எடுத்து ரெடி ஆனார்.
ஆனால் அதற்கிடையில் சிம்பு, ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்ப்பில் கன்னட படமான முஃப்டி படத்தின் தமிழ் ரீமேக்கில் கெளதம் கார்த்திக் உடன் நடித்து வருகிறார்.
மேலும் ஹன்ஷிகாவின் 50 வது படமான மஹாவில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார். ஜூன் 25 ஷூட்டிங் தொடங்கும் என மாநாடு படக்குழு அறிவித்தது. ஆனால் ஜூலை 25ஐ நெருங்கியும் படம் ஆரம்பிக்கவில்லை.
அதனால் வெங்கட் பிரபு, தற்போது புதிய வெப் சீரீஸ் எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.