ஸ்டண்ட் மாஸ்டரிலிருந்து இயக்குனராக புது அவதாரமெடுக்கும் சில்வா .!

பிரபல ஸ்டண்ட் மாஸ்டரான சில்வா அடுத்ததாக இயக்குனராக அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் சினிமாவின் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர்களில் ஒருவராக வலம் வருபவர் சில்வா .பல முன்னணி நடிகர்களுடன் பணியாற்றி உள்ள இவர் சண்டை காட்சிகளில் நடித்தும் உள்ளார்.அடுத்ததாக இயக்குனராக அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆம் ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா அடுத்ததாக ஒரு படத்தினை இயக்க உள்ளதாகவும்,அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது .அதிலும் இயக்குனராக அறிமுகமாகும் முதல் படத்தின் கதை மற்றும் திரைக்கதையை பிரபல இயக்குனரான ஏ.எல்.விஜய் எழுத உள்ளதாகவும், இந்த படத்தில் சில்வாவின் மகன்களான கெவின் மற்றும் ஸ்டீவன் ஆகியோர் நடிக்க உள்ளதாகவும்,படமானது ஜாக்கிசானின் ‘கராத்தே ஜிட்’ பாணியில் உருவாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன .இது எந்தளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.