சில்க் ஸ்மிதா பயோபிக்:சில்க் ஸ்மிதாவாக நடிகை ஸ்ரீரெட்டி.?
மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிகை ஸ்ரீரெட்டி நடிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் சில்க் ஸ்மிதா .இவர் 1996-ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார்.இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது .சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றை இந்தியில் “டர்ட்டி பிக்சர்” என்ற பெயரில் படமாக்கப்பட்டதும் ,அதற்காக வித்யாபாலனுக்கு தேசிய விருது கிடைத்ததும் குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு தமிழில் படமாக்கப்பட உள்ளதாகவும்,அதற்கு ‘அவள் அப்படித்தான்” என்று டைட்டில் வைத்துள்ளதாகவும் ,இந்த படத்தை ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தினை இயக்கிய மணிகண்டன் இயக்கவுள்ளதாகவும், நடிகரும், தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணன் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் தற்போது மேலும் ஒருவர் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை படமாக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஆம் அதனை விளம்பர பட இயக்குனர் மது என்பவர் இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அதனுடன் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் இந்த படத்தில் சில்க் ஸ்மிதா வேடத்தில் நடிகை ஸ்ரீரெட்டி நடிக்க உள்ளதாக அவரே தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.இவர் தெலுங்கு திரையுலகில் உள்ள பல நடிகர்கள் , இயக்குனர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை வைத்து சர்ச்சைக்குள்ளானவர் .அது மட்டுமின்றி தமிழில் இயக்குநர் முருகதாஸ், சுந்தர்.சி, ராகவா லாரன்ஸ் ஆகியோரை குறித்தும் பல மோசமான குற்றச்சாட்டுகளை வைத்து விமர்சனம் செய்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
My New Movie Announcement ???? Revealing The Good News ????#SriReddy #SilkSmitha pic.twitter.com/HbShUzwSyO
— Sri Reddy (@MsSriReddy) February 11, 2021