அருண் ஜேட்லி வங்கி நிதி மோசடி விவகாரத்தில் மகளைக் காப்பதற்காகவே அமைதி!
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி,பஞ்சாப் நேசனல் வங்கி நிதி மோசடி தொடர்பாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி அமைதி காப்பது வழக்கறிஞரான அவர் மகளைக் காப்பதற்காகவே எனக் தெரிவித்துள்ளார். பஞ்சாப் நேசனல் வங்கி நிதி மோசடியில் வைர வணிகர்களான நீரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி இதுவரை கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.
மெகுல் சோக்சியின் கீதாஞ்சலி நிறுவனத்துடன் அருண் ஜேட்லியின் மகளுக்குத் தொடர்புள்ளதே இந்த அமைதிக்குக் காரணம் என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
இந்த நிதி மோசடி தெரிவதற்கு ஒரு மாதத்துக்கு முன் அருண் ஜேட்லியின் மகள் தன்னுடைய பணிக்காகக் கீதாஞ்சலி நிறுவனத்திடம் பெருந்தொகையைப் பெற்றுள்ளதாக நாளேடுகளில் வெளியான செய்திகளையும் ராகுல்காந்தி சுட்டிக்காட்டியுள்ளார். நீரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோருடன் தொடர்புடைய சட்ட அலுவலகங்களில் எல்லாம் சோதனையிட்டபோது அருண் ஜேட்லியின் மகள் சட்ட அலுவலகத்தில் மட்டும் சோதனையிடாதது ஏன் என்றும் ராகுல் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.