நடிகை அனுஷ்காவின் நிசப்தம் படத்தை ஓடிடி பிளாட்பாரத்திற்கு ரூ. 25 கோடிக்கு விற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகை அனுஷ்கா நடித்து முடித்து வெளியாக காத்திருக்கும் ஒரு திரில்லர் கலந்த படம் நிசப்தம். . இந்த படத்தை ஹேமந்த் மதுகர் இயக்கியுள்ளார். அனுஷ்காவுடன் இணைந்து நடிகர் மாதவன், அஞ்சலி, மைக்கேல் மேட்சன், சுப்புராஜ், ஷாலினி பாண்டே மற்றும் ஸ்ரீனிவாஸ் அவசரளா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு கோபி சுந்தர் இசையமைத்துள்ளார். இந்த படத்தை பீப்ள் மீடியா ஃபாக்ட்றி தயாரிக்கிறது.
மேலும் இந்த படத்தை தெலுங்கு ஆங்கிலம், தமிழ் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்து வெளியிட திட்டமிட்டுள்ளனர்.இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை மிரள வைத்தது. சமீபத்தில் இந்த படத்தை ஓடிடியில் வெளியிடவுள்ளதாக செய்திகள் வெளியானதை அடுத்து படத்தின் இயக்குனர் திரையரங்குகளில் தான் முதலில் வெளிவரும் என்று கூறியிருந்தார். மேலும் தமிழ், தெலுங்கு மொழியில் உருவாகும் நிசப்தம் படத்திற்கு ‘யூஏ’ சான்றிதழ் வழங்கி சென்சார் ஆகியதை அடுத்து முதலில் இந்த படம் தியேட்டரில் தான் வெளியிடப்படும் என்பது கிட்டதட்ட உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில் தற்போது நிசப்தம் படத்தை ஓடிடியில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும், படத்தை ரூ. 25 கோடிக்கு விற்றிருப்பதாகவும் தெலுங்கு இணையதளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இதனை குறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் படக்குழுவினர் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…