சிக்மண்ட் பிராய்ட் எழுதிய கடிதங்கள் ஏலம் !!!

Default Image

.

சிக்மண்ட் பிராய்ட் மனோதத்துவத் துறையில் சாதனை படைத்த அறிஞர்களில் ஒருவர் . இவர் எலிஸ் ரெவ்ஸ் என்ற தனது முன்னாள் மாணவிக்கு எழுதிய இரு கடிதங்கள் வரும் 7ஆம் தேதி ஏலத்திற்கு வருகின்றன.

ஜனவரி 25, 1923 அன்று, எலிஸ் நோய்வாய்ப்பட்டிருந்த சமயத்தில் பிராய்ட் அவர் விரைவில் குணமடைய வாழ்த்தி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். ஆனால், அதற்கு சில நாட்கள் முன்பே எலிஸ் உயிரிழந்துவிட்டார்.

பின்னர் இதனை அறிந்து அவரது கணவருக்கு ஆறுதல் கூறி பிப்ரவரி 2,1923 அன்று மற்றொரு கடிதத்தையும் பிராய்ட் எழுதியுள்ளார்.

இந்த இரு கடிதங்களில் பிராய்ட் Freud என்று கையொப்பமிட்டுள்ளார். இரண்டுமே ஜெர்மன் மொழியில் எழுதப்பட்டவை. இவற்றை மறைந்த எலிஸின் கணவர் ஏலமிடுவதாக அறிவித்துள்ளார். இவை இந்திய மதிப்பில் ரூ.9 லட்சம் வரை ஏலம் போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

 

மேலும் தகவல்களுக்கு இணைந்திடுங்கள் தினச்சுவடு

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்