சியான் 60 படத்தில் துருவ் விக்ரமிற்கு வில்லனாக நடிகர் விக்ரம் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகன் நடிகர் துருவ் விக்ரம் இருவரும் இணைந்து நடித்து வரும் திரைப்படம் சியான் 60. இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வருகிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் லலித் குமார் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளராக ஷெரேயாஸ் கிருஷ்ணா பணியாற்றுகிறார். மேலும் இந்த படத்தில் நடிகை சிம்ரன், வாணி போஜன், சனந்த் ரெட்டி , முத்துக்குமார் போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
இந்த நிலையில் இந்த திரைப்படத்திற்கான முதல் கட்ட படப்பிடிப்பை முதலில் எடுக்காமல் முதலிலே படத்திற்கான கிளைமாக்ஸ் காட்சியை படமாக்க இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் திட்டமிட்டுள்ளாராம். ஆம் இந்த கிளைமாக்ஸ் காட்சியில் விக்ரமும் துருவ் விக்ரமும் ஆக்ரோஷமாக மோதும் சண்டைக்காட்சி தான் படமாக்க பட்டு வருகிறதாம்.
இதனை தொடர்ந்து தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், இந்த படத்தில் நடிகர் விக்ரம் துருவ் விக்ரமிற்கு வில்லனாக நடிப்பதாக தகவல்கள் வெளியா கியுள்ளது. இதனால் படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு அதிகமாக்கியுள்ளது என்றே கூறலாம். விரைவில் இந்த படத்திற்கான டைட்டில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…