நடிகர் விக்ரம் தற்போது இயக்குனர் மணிரத்தினம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்திலும், அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் பொன்னியின் செல்வன் திரைப்படம் செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. கோப்ரா திரைப்படம் ஜூன் மாதம் வெளியாக அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நடிகர் விக்ரம் தற்போது அடுத்து நடிக்க உள்ள திரைப்படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி முன்னதாக இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பா ரஞ்சித் தற்போது வேறொரு படத்தில் பிசியாக இருப்பதால் அந்த படத்தை முடித்து விட்டு விக்ரம் படத்தை இயக்குவார் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இதற்கிடையில் நடிகர் விக்ரம் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும் படத்தை இயக்க 3 இயக்குனர்கள் வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
அது யார் யார் என்றால், முதலில் இயக்குனர் மாரி செல்வராஜ், அடுத்ததாக பிஎஸ் மித்ரன் மற்றும் இயக்குனர் பாண்டிராஜ் இவர்கள் மூன்று பெயரில் ஏதோ ஒரு இயக்குனர் விக்ரமின் அடுத்த படத்தை அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. விக்ரமின் அடுத்த படத்தை எந்த இயக்குனர் இயக்கப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
சென்னை : தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருக்கும் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் அவ்வப்போது சில அரசியல் கருத்துக்களை பேசியும்…
சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ்…
தூத்துக்குடி : கடந்த 1999ஆம் ஆண்டு செப்டம்பர் 17, 18 தேதிகளில் ஒரு வழக்கு விசாரணைக்காக வின்சென்ட் என்பவர் கைது…
சென்னை : மத்தியில் நாடாளுமன்றத்திற்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தும் பொருட்டு மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு…