“வாய மூடு மோடி” என்ற புதிய #ஹஸ் டாக்# சமூகவலைத்தளத்தில் ட்ரெண்ட்..!!
பிரதமர் மோடி இதுவரை ரஃபேல் ஊழல் குறித்து பேசாமல் இருந்து விட்டு இன்று காலை 11மணிக்கு அகில இந்திய வானொலியில் மக்களிடம் பேசுகிறார்.இதனால் மோடிக்கு ஆதரவாக புதிய hash tag ட்ரெண்ட் ஆக உள்ளது.
இந்தியாவில் சமீபத்தில் ரபேல் ஊழல் பூதாகரமாக வெடித்தது.இந்திய முழுவதும் மக்கள் , அரசியல் காட்சிகள் பேசும் விவாதமாக மாறியது.அதே போல நாடு முழுவதும் தினம் தினம் பெட்ரோல் டீசல் விலை ஏற்றம் என மக்களுக்கு அன்றாடம் பாதிப்பு ஏற்பட்டது.இது இந்திய முழுவதும் மத்திய பிஜேபி அரசுக்கு எதிராக மக்களை கிளர்த்தெழ வைத்தது.
ஆனால் இப்படி மக்கள் தினம் தினம் படுகின்ற கஷ்டங்களை குறித்து பாரத பிரதமர் மோடி எதுமே பேசாமல் இருந்தார்.இது குறித்து பிரதமர் பேச வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களின் குற்றச்சாட்டாக எழுப்பி வந்தனர்.இந்நிலையில் இன்று பிரதமர் மோடி காலை 11மணிக்கு அகில இந்திய வானொலியில் மங்கி பாத் என்ற நிகழ்ச்சியில் மக்களிடம் பேசவுள்ளார்.
இதற்க்கு எதிராக பிரதமரை கண்டிக்கும் விதமாக இதுவரைக்கும் டாலர் எதிரான இந்திய பணத்தின் வீழ்ச்சி, பெட்ரோல் விலை உயர்வு, ரஃபேல் ஊழல் என்று வாயை திறக்காத மோடியை வரவேற்கும் விதமாக #MannKiBaat அல்ல #Shut_up_Modi என்ற hash tag துவக்க உள்ளதாக நெட்டிசன்கள் அறிவித்து ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
டாலர் எதிரான இந்திய பணத்தின் வீழ்ச்சி, பெட்ரோல் விலை உயர்வு, ரஃபேல் ஊழல் என்று எதற்கும் வாயை திறக்காத மோடி, இன்று காலை 11மணிக்கு அகில இந்திய வானொலியில் #MannKiBaat வாயை திறக்க உள்ளதால், பிரதமரை வரவேற்கும் விதமாக #Shut_up_Modi என்ற hash tag துவக்க உள்ளோம்.
— Savukku_Shankar (@savukku) September 30, 2018
DINASUVADU